நெதர்லாந்து அரசு எடுத்த அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
327Shares
327Shares
lankasrimarket.com

நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையை 2030 ம் ஆண்டுக்குள் நிறுத்த முடிவெடுத்திருப்பதாக நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நெதர்லாந்தில் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசலினால் இயங்கும் கார்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக நெதர்லாந்து அரசு தெரித்துள்ளது.

இதனால் 2 விழுக்காடு மட்டுமே உள்ள எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை நெதர்லாந்து அரசின் இந்த முடிவு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இம்முடிவை அடுத்து புதிய வகை எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அந்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டை பொறுத்த வரை டெஸ்லா முதலிடத்தில் உள்ளது. அந்நிறுவனத்தின் S மற்றும் X ரக கார்களே எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

ஹுண்டாய் மற்றும் பி.எம்.டபிள்யு நிறுவன கார்கள் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்