உலகின் அதிக எடை கொண்ட குழந்தை இதுதான்! 10 மாதத்தில் 30 கிலோ

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் வசிக்கும் 10 மாத குழந்தை 30 கிலோ எடையுடன் உலகின் அதிக எடை கொண்டு குழந்தையாக கருதப்படுகிறது.

மெக்சிகோவை சேர்ந்த தம்பதி Mario Gonzalez- Isabel Pantoja, இவர்களது குழந்தை Luis Manuel.

பிறந்து பத்து மாதங்களேயான Luis Manuel எடை முப்பது கிலோவாகும், 9 வயது சிறுவனின் எடைக்கு நிகராக இருக்கிறான்.

குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்த பின்னரே Luis Manuel பெற்றோர் குழந்தையின் எடை அதிகரிப்பதை உணர்ந்துள்ளனர்.

உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை சென்ற போது, Prader-Willi syndrome என்ற அரியவகை மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிகளவு பசி எடுக்கும், எலும்புகள் வலுவற்று காணப்படும், உடல் உறுப்புகளில் சீரான வளர்ச்சி இருக்காது, தூக்கமின்மை பிரச்சனையும் இருக்கும்.

கட்டுக்கடங்காமல் உடல் எடை அதிகரித்துச் சென்றால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தங்களுடைய மகனின் மருத்துவ செலவுக்காக பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers