காபியில் மிதந்த கரப்பான் பூச்சியின் கால்கள்: மன்னிப்பு கேட்ட மெக்டொனால்ட்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் மெக்டொனால்ட் துரித உணவகம் உலகில் உள்ள நாடுகளில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது.

இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுவது உண்டு.

பாங்காங்கில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் நஸ்டல்ஜிக் என்பவர் காபி அருந்தியுள்ளார்.

அப்போது, காபியில் ஏதோ மிதப்பதை கண்டறிந்த அவர், அதனை கூர்ந்து கவனித்தபோது அது கரப்பான் பூச்சியின் கால்கள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த உணவக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த காபிக்கு பதிலாக வேறு காபி வழங்கப்பட்டது, ஆனால் மறுபடியும் வழங்கப்பட்ட காபியில் கரப்பான் பூச்சியின் கால்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும், அதனை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

வாடிக்கையாளரின் பதிவை 1,700-க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர். 14,000-க்கும் அதிகமான பகிர்வுகளுடன் இந்த பதிவு வைரலாக பரவியது.

இதையடுத்து, தாய்லாந்தின் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக்கில் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய துரித உணவு சங்கிலியின் பாதுகாப்புத் தரங்களை பின்பற்றுவதாக வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மேலும், உணவு பாதுகாப்புத் தரங்களை கடைபிடிக்க காபி இயந்திரத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதாக மெக்டொனால்ட்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்