வடகொரியாவுடன் எந்த நேரத்திலும் சீனா போர் தொடுக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனை மேற்கொண்டால் அது போருக்கு வழிவகுக்கும் என அதன் நட்பு நாடான சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியாவின் நட்பு நாடான சீனா, அந்த நாட்டுடன் போருக்கு ஆயத்தமாவதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள கல்வியாளர் ஒருவர், இதுவரை டிரம்ப் அரசு வடகொரியாவுடன் போருக்கு ஆயத்தமாவதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் சீனா எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது என்றார்.

வடகொரியாவின் சமீபத்திய செயல்கள் அனைத்தும் மரணத்தை விலைக்கு வாங்கும் பொருட்டே இருந்தது எனக் கூறும் அவர், நெடுங்காலமாக தொடர்ந்து வந்த சீனா வடகொரியா உறவு என்பது முடிவுக்கு வந்துவிட்டது என்றார்.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் செயற்பாடுகளால் சீனா அதிபர் சி ஜிங்பிங் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனாலையே இந்த அதிரடி முடிவுக்கு சீனா எட்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனி வடகொரியா அரசிடம் இருந்து ஒரு ஏவுகணை சோதனை மேற்கொண்டால் அது கண்டிப்பாக போருக்கான ஆயத்தமாகவே கருதப்படும் என்றார்.

ஒரு காலத்தில் சோவியத் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை சீனா மேற்கொண்டு வந்தது. ஆனால் ரஷ்யா சீனாவுடன் போருக்கு புறப்பட்டது.

வியட்நாமுடன் இதேபோன்று நட்புறவை பாராட்டியது சீனா, ஆனால் 1979ஆம் ஆண்டு சீனாவுடன் போரிட்டது வியட்நாம்.

தற்போது வடகொரியாவும் அதே நிலையில் எட்டியுள்ளதாக கூறும் அந்த கல்வியாளர், வடகொரியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

உலகில் எந்த நாடும் இதுவரை இதுபோன்ற பொருளாதார தடைகளை எதிர்கொண்டதில்லை. ஆனால் வடகொரியா தமது மக்கள் குறித்து எவ்வித சிந்தனையும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers