ரயில் தண்டவாளத்தில் பெண்ணை தள்ளிவிட்டு கொல்ல முயற்சி: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை நபர் ஒருவர் தண்டவாளத்தின் மீது எட்டித்தள்ளிவிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 59 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ரயிலுக்காக நடைமேடையில் காத்து நின்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக நடந்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்மணியை திடீரென்று தண்டவாளத்தின் மீது பிடித்து தள்ளிவிட்டு, எதுவும் நடந்திராதது போன்று நடந்து சென்றுள்ளார்.

தண்டவாளத்தில் விழுந்த அந்த பெண்மணிக்கு தாடை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தின்போது அந்த பாதையில் எந்த ரயிலும் வராதது அவரது அதிர்ஷ்டம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளது.

குறித்த பெண்மணியை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே குறித்த பெண்மணியை தண்டவாளத்தில் பிடித்து தள்ளி கொலை செய்ய முயன்றதன் காரணம் வெளிவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்