ஜப்பான் தேர்தல்: ஆளும் கூட்டணிக்கு பாரிய வெற்றி

Report Print Thayalan Thayalan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி, 312 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மக்கள் செல்வாக்கு உள்ளபோதே, பொதுத் தேர்தலை நடத்தி மீண்டும் பிரதமராக தீர்மானித்த ஷின்சோ அபே, கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையைக் கலைத்தார்.

இந்நிலையில், ஜப்பானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் மொத்தமாகவுள்ள 465 இடங்களில் சுமார் 1,200 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி 312 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆகையால், சுதந்திர ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து, ஷின்சோ அபே மீண்டும் பிரதமராகத் தெரிவாகின்றார். ஐப்பானில் அதிககாலம் பிரதமராகப் பதவி வகித்த பெருமையும் ஷின்சோ அபேயைச் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்