சவுதி அரேபியாவில் மைதானத்திற்குள் நுழைய பெண்களுக்கு விரைவில் அனுமதி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் அடுத்தாண்டு முதல் மைதானங்களுக்குள் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதியில் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தும் வகையிலும் இளவரசர் முகம்மது பின் சல்மான் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மைதானத்துக்குள் நுழையவும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

ரியாத், ஜித்தா மற்றும் தம்மான் ஆகிய நகரங்களில் உள்ள மைதானங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து விளையாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், மூன்று நகரங்களில் பெண்களை அனுமதிப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், 2018ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் போட்டியை பார்த்து ரசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மைதானத்துக்கு உள்ளே ரெஸ்டாரண்ட், காபி ஷாப்கள் மற்றும் மொனிட்டர் ஸ்கீரின்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்