மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மதுபானம் 25% தள்ளுபடி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இஸ்ரேலில் உள்ள பார் ஒன்று மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்கள் அருந்தும் மதுவிற்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

`பிளட்டி ஹவர்` என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம், மாதவிடாயில் உள்ள பெண்களுக்கு `சாதகமாக` ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற அங்கீகாரத்தின் வெளிப்பாடு என கூறுகின்றனர் இந்த திட்டத்தை உருவாக்கிய இரு பெண்கள்.

நம்பிக்கையின் அடிப்படையில் இந்த தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

வாழ்க்கையின் 25 சதவிகித காலத்தை மாதவிடாயில் கழிக்கும் பெண்களுக்கு, ஓர் இரவிற்காவது அவர்களுக்கு `சாதகமான` ஒன்றை பெற, தகுதியானவர்களே என்கிறனர் அன்னா லூலூ பாரின் உரிமையாளர்கள்.

"இந்த திட்டத்தின் நோக்கம் என்பது, தள்ளுபடி அளித்தல், கவனத்தை ஈர்த்தல் மற்றும், `உங்களை நாங்கள் அங்கீகரிக்கிறோம், தற்போது நீங்கள் உள்ள சூழலை நாங்கள் அறிவோம், உங்களுக்கு சாதகமாக ஒரு செயலை செய்கிறோம்` என்பதை விளக்கும் வகையில் ஒருவரை நடத்துதல்" என்று, ஹாஆரட்ஸ் என்ற இஸ்ரேல் பத்திரிக்கையிடம், மொரன் பாரிர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையே ஒரு பாரில் வந்தது என விளக்குகிறார் பாரிர். தான் ஒயின் கேட்டபோது, பணியாளருக்கு அவர் கேட்பது சிவப்பா அல்லது வெள்ளை ஒயினா என்ற சந்தேகம் வந்தது என்றும், அதன் மூலமாகத்தான் இந்த யோசனை தனக்கு தோன்றியதாக பாரிர் கூறுகிறார்.

"அதற்கு நான் எளிமையாக பதிலளித்தேன். இப்போது உங்களுக்கு நினைவிருக்கும்: நான் மாதவிடாயில் உள்ளேன். அதனால் எனக்கு சிவப்பு ஒயின் கொண்டுவாருங்கள்."

இந்த சலுகை, திங்கள், செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் அளிக்கப்படுகிறது.

- BBC - Tamil

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்