சிறுமியை கடத்தி பெற்றோரை மிரட்டிய தம்பதி: 260 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் சிறுமி ஒருவரை கடத்தி அவரது பெற்றோரிடம் இருந்து பணம் கேட்டு மிரட்டிய தம்பதிக்கு அங்குள்ள நீதிமன்றம் 260 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மெக்சிகோவின் Ixtlahuaca பகுதியில் அமைந்துள்ள ஹொட்டேல் அருகாமையில் இருந்து பெயர் வெளியிடப்படாத சிறுமியை கடத்திய David Villegas Inclan மற்றும் Anabel Moreno Moreno ஆகிய இருவரும் பெருந்தொகை கேட்டு மிரட்டியுள்ளனர்.

குறித்த நேரத்தில் பணம் தர மறுத்தால் சிறுமியை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி Ixtlahuaca பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹொட்டேல் அருகாமையில் இருந்து குறித்த சிறுமியை கடத்தியுள்ளனர்.

பின்னர் குண்டுகட்டாக காரில் வைத்து தலைநகர் மெக்சிகோ சிட்டியின் அருகாமையில் உள்ள Zapata நகருக்கு இட்டுச் சென்று சிறை வைத்துள்ளனர்.

அங்கிருந்து சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட தம்பதியின் மிரட்டலுக்கு பயந்து பெருந்தொகை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியை விடுவித்த நிலையில், நடந்த சம்பவத்தை பொலிசாருக்கு புகாராக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் கடத்தலில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து Inclan-கு 160 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது காதலி Moreno-கு 100 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து Ixtlahuaca பகுதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி சிறுமியின் பெற்றோரிடம் மிரட்டி பெற்றூக் கொண்ட பணம் முழுமையும் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற செலவினங்களுக்காக 1142 பவுண்ட் தொகையை தனியாக செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...