நான் செவ்வாய் கிரக மனிதன்: பரபரப்பை கிளப்பும் இளைஞர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நான் பூமியில் பிறப்பதற்கு முன், செவ்வாய் கிரகத்தில் பிறந்தேன் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் Volgograd பகுதியைச் சேர்ந்தவர் Boriska Kipriyanovich (21). இவர் கடந்த காலத்தில் நான் செவ்வாய் கிரகத்தில் பிறந்ததாகவும், தற்போது பூமியில் பிறந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவரின் பெற்றோர்களும் இவன், வேற்றுகிரகவாசிகளின் நாகரீகங்களை பேசுகிறான். அதுமட்டுமின்றி பண்டைய காலத்தில் வாழ்ந்த எகிப்தியர்களுக்கும் இவனுக்கு தொடர்பு இருப்பது போல் கூறுகிறான்.

ஆனால் நாங்கள் இவனுக்கு இது குறித்து எந்த ஒரு பயிற்சியும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இது குறித்து Boriska Kipriyanovich கூறுகையில், பூமியில் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் பிறந்து வசித்து வந்தேன்.

அப்போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. ஆணு ஆயுத போர் நடைபெற்றது. இதனால் அங்கிருந்த அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதில் பலர் உயிரிழந்தனர், சிலர் தப்பி பிழைத்தனர்.

அங்கு நம்மைப் போன்று பலர் வாழ்கின்றனர். சுவாசிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு அங்கு உள்ளது. அதுமட்டுமின்றி நீர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இவர் கூறியதற்கு எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இல்லை. ஆனால் செவ்வாய் கிரகத்தில் நான் வாழ்ந்த போது ஏற்பட்ட காயம் தான் இது என்று தனது தோளில் உள்ள காயத்தின் தழும்பை அவர் காட்டியுள்ளார்.

மேலும் அவரது பெற்றோர் ஒரு சில நேரங்களில் இவன் தாமரை போன்ற நிலையில் உட்கார்ந்து செவ்வாய், கோள் அமைப்புகள் மற்றும் பிற நாகரீகங்களைப் பற்றி விரிவாக கூறுவான் என்றும் இது ஆச்சரியமாக இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்