வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனையால் குறிப்பிட்ட பகுதியில் குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவின் Kilju மாகாணத்திலேயே குழந்தைகள குறைபாடுகளுடன் பிறப்பதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி இப்பகுதியில் உள்ள 80 விழுக்காடு மரங்களும் கருகியுள்ளதாகவும், கிணறுகளில் தண்ணீர் வரண்டு காட்சி தருவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் குடியிருக்கும் 21 பேர் கொண்ட இளைஞர்கள் இதன் காரணமாக அங்கிருந்து வெளியேறி தென் கொரியாவில் தற்போது தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் வெளியிட்ட பல தகவல்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக உள்ளூர் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக வடகொரியா மீது வார்த்தை போரில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது ராணுவத்தை பயன்படுத்தும் நோக்கம் இல்லை எனவும், வடகொரியா பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனவும் பேசி வருகிரார்.
பாதுகாப்பற்ற அணு ஆயுத சோதனைகளால் அணு கதிர்வீச்சுக்கும் வடகொரியா இரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணு கதிர் வீச்சு குறித்து வெளியான தகவலுக்கு அந்த நாடு உடனே மறுப்பு தெரிவித்திருந்தாலும், உள்ளூர் மக்கள் குறிப்பிட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.