வானில் இருந்து சுட்டுத் தள்ளிய பொலிஸ்: பேஸ்புக் லை-வில் மரணத்தை பதிவு செய்த இளைஞர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1345Shares

பிரேசிலில் இளைஞர்கள் பேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டரில் இருந்து பொலிசார் அவர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

பிரேசிலில் பொலிசார் சமீபகாலமாக போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது போன்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தான், 3 இளைஞர்களை பொலிசார் சுட்டு கொலை செய்துள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில், பிரேசிலின் Rio de Janeiro-வில் நான்கு இளைஞர்கள் காரில் உட்கார்ந்து கொண்டு பேஸ் புக்கில் லைவ் செய்கின்றனர்.

அதில் காரின் உள்ளே பாடல் ஒலிக்கிறது. இதையடுத்து அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று துப்பாக்கி குண்டுகளின் சத்தம் தொடர்ந்து வருகிறது.

இதில் காரின் உள்ளே இருந்த மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலே இறந்துவிட்டதாகவும், ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இவர்களை பின்தொடர்ந்து வந்து பொலிசார் தான் இந்த செயலை செய்ததாகவும், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து Marcia Borges என்பவர் கூறுகையில், Rio de Janeiro-வில் நீண்ட காலமாக போதை பொருள் கும்பலின் பிரச்சனை இருந்தது.

பொலிசாரின் செயலை நான் பாராட்டுகிறேன். ஆனால் அவர்களை கைது செய்யாமல், பொலிசார் ஏன் சுட்டுக் கொன்றனர்? என்பது தெரியவில்லை, அவர்களின் நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதும் தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்