தமது 3 கணவர்களுக்கு விஷம் வைத்து கொன்ற பெண்: அதிர்ச்சி தரும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
288Shares

ஜப்பானில் 70 வயது பெண்மணி ஒருவர் பணத்துக்கு ஆசைப்பட்டு தமது 3 காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் அங்குள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜப்பானின் கியோட்டோ பகுதியில் குடியிருந்து வரும் 70 வயது Chisako Kakehi என்பவருக்கு தான் நேற்றைய தினம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

குறித்த பெண்பணி பணத்துக்கு ஆசைப்பட்டு தமது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார்.

மட்டுமின்றி இதுவரை 3 நபர்களை இதுபோன்று அவர்களது ஆஸ்திகளை கைப்பற்றிய பின்னர் விஷம் தந்து கொலை செய்துள்ளார்.

4-வது நபரிடம் தமது கைவரிசையை காட்ட எத்தனிக்கையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். ஆனால் இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வெளியிட்ட தகவல் ஜப்பான் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kakehi கடந்த 1994 முதல் 2013 வரை 7 நபர்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல் இல்லை.

ஆதலால் அவர்களின் பணத்தை சொந்தமாக்கிய பின்னர் Kakehi குறித்த நபர்களுக்கும் விஷம் தந்து கொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கறுப்பு விதவை என அறியப்பட்டுவரும் Kakehi இதுவரை நான்கு முறை திருமணம் செய்துள்ளார்.

இதுவரை சுமார் 6.6 மில்லியன் பவுண்ட் தொகை அளவுக்கு காதலர்களிடம் இருந்து சுருட்டியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது 3 கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள Chisako Kakehi கூடிய விரைவில் தூக்கிலடப்படுவார் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்