6 ஆண்டுகளாக பாலியல் அடிமை: இளம்பெண்ணின் நரக வாழ்க்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1457Shares

ரஷ்யாவில் சமூகவலைதளம் வாயிலாக அறிமுகமான இளம்பெண்ணை நபர் ஒருவர் 6 ஆண்டுகள் பாலியல் அடிமையாக சிறை வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நபரால் கடும் சித்திரவதைக்கு உள்ளான இளம்பெண் கடந்த வாரம் பொலிசாரின் உதவியால் தமது 4 குழந்தைகளுடன் தப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் Rinat Bilyanov என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

டேட்டிங் இணையதளம் ஒன்றில் முதன்முறையாக இருவரும் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அந்த நபரை நம்பி குறித்த பெண் அவரது குடியிருப்புக்கு குடியேறியுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளாக ஒருமுறை கூட அந்த குடியிருப்பில் இருந்து குறித்த பெண் வெளி உலகம் கண்டதில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே உத்தியோகப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த அவர், மத ரீதியான சடங்கு ஒன்றை மட்டும் நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே முதல் குழந்தை பிறந்த பின்னர் அந்த நபரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதுவரை பாலியல் கொடுமை மட்டுமே செய்து வந்த அவர், கொடூரமாக தாக்கவும் தொடங்கியுள்ளார்.

கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபடும் அவர் பாலியல் தேவைக்கு மட்டும் குறித்த பெண்ணை அணுகியுள்ளார்.

இந்த 6 ஆண்டு காலத்தில் 4 குழந்தைகளுக்கு தாயான பின்னரும், அந்த நபரால் பாலியல் கொடுமைக்கும் கண்மூடித்தனமான தாக்குதலுக்கும் தாம் இரையாகி வந்ததாக குறும் அந்த பெண், கடந்த வாரம் குறித்த நபர் குடியிருப்பில் இல்லாத நிலையில், கிட்டிய வாய்ப்பை பயன்படுத்தி தொலைபேசி வாயிலாக பொலிசாரிடம் உதவி கேட்டு கெஞ்சியுள்ளார்.

இதனையடுத்து குறித்த குடியிருப்பை முற்றுகையிட்ட பொலிசார், அந்த இளம்பெண்ணுடன் 4 குழந்தைகளையும் அங்கிருந்து மீட்டுள்ளனர்.

தற்போது பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவர், தமது உடலில் உள்ள காயங்களை காட்டி நீதி வேண்டும் எனக் கோரியுள்ளார்.

தமது குடும்பத்தினர் 2.5 மில்லியன் பவுண்ட் தொகை தமக்கு தந்தால் மட்டுமே குடியிருப்பில் இருந்து வெளியே அனுப்புவதாக அந்த நபர் அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார்.

தற்போது பொலிசாரால கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் அந்த நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்