ஈரானுக்கு எதிராக சவுதி அரேபியாவால் ஒன்றும் செய்ய முடியாது என ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் சன்னி பிரிவை சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஜனாதிபதிக்கு சவுதி அரேபியாவும், ஹவுத்தி படைக்கு ஈரானும் ஆதரவளித்து வருகிறது.
ஹவுத்தி படையை குறிவைத்து சவுதி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹவுத்தி படையின் இத்தாக்குதலுக்கு ஈரான் உதவி செய்ததாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது.
மேலும் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம், இதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என சவுதி எச்சரித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி, ஈரானின் வலிமை பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியம்.
எங்களை ஒன்றும் செய்ய இயலாது, அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் ஒன்று திரண்டுள்ளனர்.
எங்களுக்கு எதிராக அவர்களால் ஒன்று சாதிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏமன் நாட்டு எல்லைகளை சவுதி அரேபியா மூடியுள்ளது பேரழிவை ஏற்படுத்தும் என ஐநா எச்சரித்துள்ளது.