ஈரான் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 328 ஆக அதிகரிப்பு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
245Shares
245Shares
ibctamil.com

ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 328 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஈரானில் உள்ள எல்லையில் தான் 7.3 ரிக்டர் அலகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, பலியானவகளின் எண்ணிக்கை 100-ஆக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் அதிகாரிகள் தற்போது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘இடிபாடுகளில் சிக்கி இதுவரை 328 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 2,500 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளை சுற்றியுள்ள சுமார் 70,000 பேருக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் ஈராக்கில் இருந்து சுமார் 19 மைகள் தூரத்தில் சுமார் 23 கி.மீ ஆழத்தில் இந்த நலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற நிலநடுக்கங்கள் மிகுந்த உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படும் என தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த 2003-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 26,000 பேர் வரை பலியானது குறிப்பிடத்தக்கது.

European Pressphoto Agency

Tasnim News Agency/Reuters

Associated Press

Getty Images

Ako Rasheed/Reuters

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்