400 பேர் உயிரைப்பறித்த நிலநடுக்கம்: வெளியானது பாதிப்புகளின் அச்சுறுத்தும் வீடியோ

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
489Shares
489Shares
ibctamil.com

ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் நேற்று தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் எல்லையில் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 9.18 மணிக்கு தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2,800 பேர் காயமடைந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

7.3 ரிக்டர் அளவில் தாக்கிய இந்த நிலநடுக்கத்தால் எற்பட்ட பாதிப்புகள் தொடர்பான வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொடும் குளிர் காலத்தில் வெட்டவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டுமின்றி நிலநடுக்கத்தின் பின்னர் ஏற்பட்டுவரும் தொடர் நில அதிர்வுகளாலும் பெருவாரியான மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.

பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்கள் தொலை தூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

கால நிலை காரணமாக ஹெலிகொப்டர் சேவையும் தொடர் முடியாத நிலை இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 70,000 மக்கள் குடியிருப்புகளை இழந்து தங்க வசதி இன்று தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான கட்டிடங்கள் மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதால் பொதுமக்கள் கட்டிடங்களின் அருகாமையில் செல்ல வேண்டாம் என ஈராக்கிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்