ஈரான் நிலநடுக்கம்: தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பான நிமிடங்கள்! வீடியோ இதோ

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
353Shares
353Shares
lankasrimarket.com

ஈரான் மற்றும் ஈராக் எல்லைபகுதியில் கடந்த் 12 ஆம் திகதி 7.3 ரிக்டர் அளவில் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர், 7,600 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலான நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஈரான் - ஈராக் நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கிய பரபரப்பு நிமிடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஈரான் - ஈராக் எல்லைப்பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கம் தர்பந்திகான் அணையை தாக்கியபோது அந்த பரபரப்பு நிமிடங்களை அணையின் கட்டுப்பாட்டு அறையிலிருந்த சிசிடிவி கமெராக்கள் பதிவு செய்தன.

பெரிய பாறை ஒன்று சாலையில் நொறுங்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் அணை உடைந்துவிடும் என்று முதலில் அதிகாரிகள் அஞ்சினர். ஆனால், 7.3 என்ற அளவிலான நிலநடுக்கத்தை பெரிய விரிசல்களின்றி அணை தாக்குபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று ஏ எஃப் பி தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்