பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
316Shares
316Shares
ibctamil.com

மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெண் அகதிகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மியான்மரிலிருந்து தப்பி வந்த தன்னை, அழகுபடுத்தி, பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் செய்ய வைத்தது குறித்து 21 வயது பெண் ஹலீமா பரபரப்பு தகவலை சர்வதேச ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார்.

வங்கதேசத்தில் நுழைந்த உடன், நாங்கள் ஒரு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஒரு உள்ளூர் மனிதர் எங்களுக்கு உணவு வழங்கினார்.

மேலும் அவர் தன்னிடம் வந்து தன் மனைவியை இழந்துவிட்டதாகவும் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகவும் கூறினார்.

அதை நம்பி காக்ஸ் பசார் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தாம் அழைத்துச் செல்லப்பட்டதாக ஹலீமா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த குடியிருப்பில் தன்னைப் போலவே ஏழெட்டு இளம்பெண்கள் அங்கு இருந்ததை பார்த்ததாகக் கூறிய ஹலீமா, தான் பயந்துவிட்டதாகவும் பின்பு அந்த வீட்டில் பல ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு ராகைனில் நடைபெற்ற வன்முறையில் இருந்து தப்பிக்க, மூன்று மாதங்களுக்கு முன்னர் வங்கதேசத்திற்கு வந்து சேர்ந்த ஹலீமா,

தன் குடும்பம் எங்குள்ளது என்பது குறித்துத் தெரியாத அவர், தம் அக்கம் பக்கத்தினருடன் வங்கதேசம் வந்து சேர்ந்துள்ளார்.

வங்கதேசப் பெண் ஒருவர் நடத்தி வந்த ஒரு குடியிருப்பில் தாம் இரண்டு மாதங்கள் தங்கியதாக கூறும் ஹலீமா,

சில நேரங்களில் ஒரு இரவில் மட்டும் மூன்றிலிருந்து நான்கு ஆண்களுடன் உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது என கூறும் அவர், பல நாட்கள் ரத்தப் போக்கால் அவதிப் பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த சமயங்களில் எல்லாம் ஹலீமாவிற்கு எந்தப் பணமும் கொடுக்கப்படவில்லை, மூன்று வேலை சாப்பாடு மட்டும்தான் தரப்பட்டது எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உணவுக்கு பணமில்லாத சூழல் ஏற்பட்டதால் குறித்த நரகத்தில் இருந்து மீட்கப்பட்ட பின்னரும் மீண்டும் பாலியல் தொழில் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஹாலீமா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்