அமெரிக்காவிற்கு வடகொரியாவின் கிறிஸ்துமஸ் பரிசு: தென்கொரியா எச்சரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா கிறிஸ்துமஸ் நேரத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவுகணை ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் விட்டு பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்நாட்டின் மீது என்ன தான் பொருளாதார தடை விதித்தாலும், வடகொரியா தொடர்ந்து தன்னுடைய சோதனைகளை செய்து கொண்டே இருக்கிறது.

இதனால் வடகொரியாவை அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

இந்நிலையில் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு நேற்று எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் வடகொரியா தன்னுடைய முடிவில் தீர்க்கமாய் உள்ளது, இந்தாண்டு இறுதிக்குள் சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை உருவாக்கி ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த முறை ஏவப்படும் ஏவுகணை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள் எப்போதும் வேண்டும் என்றாலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டும் என்பது வடகொரிய ஜனாதிபதியின் நோக்கம், அதனால் இந்த முறை கிறிஸ்துமஸ் நேரத்தில் வடகொரியா தனது சோதனையை மேற்கொள்ளலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதற்கு வடகொரியா பண்டிகை காலங்களில் ஏவுகணை சோதனைகள் ஒரு போதும் நிறைவேற்றியது கிடையாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்