மாதவிடாயை நிறுத்த முயற்சி... குழாயில் இருந்து வெளிவரும் பாம்புகள்: வடகொரியா பெண் வீரர்களின் துயரம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

உலகிலேயே 4வது மிகப்பெரிய இராணுவத்தை கொண்டிருக்கும் வட கொரியா, அங்கு பணியாற்றும் பெண்களை பல்வேறு சித்ரவதைக்கு ஆளாக்குகின்றது என்று முன்னாள் வீரர் Lee So Yeon தெரிவித்துள்ளார்.

வடகொரியா இராணுவத்திற்கு 20 முதல் 30 வயது பெண்களே அதிகமாக தெரிவு செய்யப்படுவார்கள், காரணம் அவர்களால் தான் மிக ஆற்றலோடு இருக்க முடியும்.

பெண் வீரர்கள் தங்குவதற்காக சிறிய அறை மட்டுமே ஒதுக்கப்படும், ஆனால் அவற்றில் இரண்டு டஜன் பெண்கள் தங்க வேண்டும் என வற்புறத்துவார்கள்.

நாங்கள் தூங்குவதற்கு அரிசி போடுவதற்கு பயன்படுத்தப்படும் சாக்கினை வைத்து படுக்கை தயார் செய்து அதனை எங்களுக்கு கொடுப்பார்கள்.

நாட்கள் செல்ல அதிலிருந்து நாற்றம் வீசும், பெண்கள் தங்களது ஆடையினை வைத்துக்கொள்வதற்கு சிறிய அளவிலான பெட்டி கொடுக்கப்படும்.

அதில் அதிபரின் புகைப்படம் மற்றும் அவரது தந்தையின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

இந்த பெட்டிகளை அதிபரின் தந்தை உயிரோடு இருந்தபோது பயன்படுத்தியதாகும். அந்த பெட்டிகள் எங்களது துணிகளை வைத்துக்கொள்வதற்கு போதுமானதாக இருக்காது.

அதுமட்டுமின்றி குளிப்பதற்கு தண்ணீர் சரியாக கிடைக்காத காரணத்தால் நேரடியாக மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

சில நேரங்களில் அந்த குழாய்களில் இருந்து தவளைகளும், பாம்புகளும் வெளிவருதை கண்டு பலமுறை பயந்திருக்கிறோம்.

இதை விட மோசமானது ஒன்று, பெண்களின் மாதவிடாயை விரைவில் நிறுத்துவதற்கு முயற்சி செய்வார்கள். சில பெண்கள் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவார்கள் என்று கூறியுள்ளார்.

அணு ஆயுத சோதனையால் தங்கள் நாட்டை பலம் வாய்ந்த நாடாக காட்டிக்குகொள்வதில் அதிக முனைப்புடன் இருக்கும் வடகொரியாவில் உணவுப்பற்றாககுறை, பல அடக்குமுறைகள் வெளியில் தெரியா வண்ணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்