நைஜீரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரம் Mubi, இங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக மக்கள் கூடியிருந்த போது தாக்குதல் நடந்துள்ளது.
இத்தாக்குதலில் இதுவரையிலும் 50 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலுக்கு போகோஹராம் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.