முகாபே மேற்கொண்ட முக்கிய முடிவு: ஜிம்பாப்வே மக்கள் மகிழ்ச்சி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வே ஜனாதிபதி ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியான Zanu-PF ஜனாதிபதி முகாபே மீது நடவடிக்கை எடுக்கும் என அறிவித்திருந்த நிலையில் பதவி விலகும் முடிவை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதனால் 37 ஆண்டு காலம் நீண்ட முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது. குறித்த தகவல் வெளியானதும் தலைநகர் ஹராரேவில் குழுமியிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட்டு கொண்டாடியுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் குறித்த தகவலை கேட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முகாபே தமது ராஜினாமா கடிதத்தில், ராபர்ட் முகாபே ஆகிய நான் ஜிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, எனது முடிவு எந்த வித கட்டாயத்தாலும் மேற்கொள்ளப்பட்டதல்ல, சுமூகமான பதவி விலகலையே தாம் விரும்பியதாகவும் முகாபே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜிம்பாப்வே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக எமர்சன் முனங்காக்வா பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்