சவுதி பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Report Print Thayalan Thayalan in ஏனைய நாடுகள்
சவுதி பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

சவுதி அரேபியாவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுகளைப் போன்று வெள்ளம் தேங்கி உள்ளது.

ஜித்தா, மக்கா நகரங்களில் பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடர வாய்ப்புள்ளதால் பல சாலைகளை மூட மக்கா பேரிடர் மேலாண் மையம் அறிவுறுத்தி உள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அந் நாட்டு நிர்வாகம் கேட்டுள்ளது.

கனமழை, அதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிப்பது, அதில் மிதக்கும் வாகனங்கள், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளது போன்ற ஒளிப்படங்கள், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்