கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: 11 பேர் கதி என்ன?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் இன்று பறந்து கொண்டிருந்தது.

வழக்கமான பயிற்சிக்கு பின்னர் அங்குள்ள அமெரிக்க கடற்படையின் ரொனால்ட் ரீகன் போர் கப்பலில் தரை இறங்குவதற்காக சென்ற அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஒக்கினாவா தீவின் தென்கிழக்கே கடலில் விழுந்தது.

இவ்விபத்து தொடர்பில் தகவல் அறிய வந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை 8 பேரை உயிருடன் மீட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படை மற்றும் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்