வடகொரியாவுக்கு அடி மேல் அடி: கதறவிடும் சீனா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1605Shares
1605Shares
lankasrimarket.com

வடகொரியா செல்லும் முக்கிய சாலை போக்குவரத்தை துண்டித்து கிம் ஜாங் உன் அரசை மேலும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது சீனா.

சீனாவில் இருந்து இனி வடகொரியாவுக்கு விமான போக்குவரத்து சாத்தியம் இல்லை என நேற்று அறிவித்த நிலையில், இன்று சாலை போக்குவரத்தையும் துண்டித்துள்ளது சீனா.

சீனாவின் இந்த அதிரடி முடிவால் வடகொரியா கடும் நெருக்கடியை சந்திக்கும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் சீனாவில் இருந்து வடகொரியா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்ததால் மட்டுமே விமான சேவையை ரத்து செய்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

மேலும் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளின் பொருளாதார தடை உள்ளிட்டவைகளால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி சீனா மற்றும் வடகொரியா நாடுகளிடையே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 50 விழுக்காடு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் முக்கிய நட்பு நாடாக சீனா மட்டுமே நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆனால் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் அடாவடி நடவடிக்கைகளால் அந்த உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த விடயத்தில் இரு நாடுகளும் போதிய அக்கறை எடுக்கொள்ளாவிட்டால் நிரந்தர எதிரிகளாக மாறவும் வாய்ப்பு உண்டு என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளையில் அமெரிக்கா தென் கொரியாவுடன் நெருங்குவதால் சீனா தென் கொரியாவுடன் இணக்கமாக செல்ல மறுத்து வருகிறது.

கடந்த ஓராண்டாக சீனர்கள் தென் கொரிய நிறுவனங்களின் பொருட்களை அறவே ஒதுக்கியுள்ளதும் இதன் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது.

மட்டுமின்றி சீனர்கள் தென் கொரியாவில் சுற்றுலா செல்வதையும் பெருமளவு குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்