சுற்றுலாதலத்தில் ஆபாச புகைப்படம்: அமெரிக்க இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

புத்த கோவிலில் முன்பு ஆபாசமாக போஸ் குடுத்து புகைப்படம் எடுத்த 2 அமெரிக்க இளைஞர்கள் தாய்லாந்து நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது.

அமெரிக்க நாட்டவர்களான Joseph மற்றும் Travis Dasilva ஆகிய இரு இளைஞர்களே தாய்லாந்தில் தற்போது சிறை தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர்.

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இருவரும் தாய்லாந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் புத்த கோவிலில் முன்பு இருவரும் ஆபாசமாக போஸ் குடுத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் குறித்த புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். சுமார் 15,000 பிந்தொடர்பாளர்களை கொண்ட இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு சுற்றுலா தலங்களில் இருவரும் எடுத்துக் கொண்ட இதுவரையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலாவை முடித்து தாய்லாந்தில் இருந்து வெளியேற பாங்காக் விமான நிலையம் வந்தபோது பொலிசாரால் இருவரும் கைதாகியுள்ளனர்.

விசாரணையில் ஆபாச புகைப்படம் எடுத்துள்ளதை ஒப்புக்கொண்ட இருவருக்கும் பொதுவிடத்தில் நிர்வாணமாக இருந்ததாக கூறி ஒவ்வொரு புகைப்படத்திற்கும் தலா 154 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியது தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும், இனிமேல் அவர்கள் தாய்லாந்து செல்லவும் வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...