ஈரானில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஈரானின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில், ‘ஈரானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து 10 நிமிட இடைவேளையில், ரிக்டர் அளவில் 5.0ஆக மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளிவராத நிலையில், உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், ஈரான்- ஈராக் எல்லையில் உள்ள கேர்மான்ஷா மாகாணத்தில், 7.3 என்னும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுமார் 400 பேர் பலியாகினர்.

கடந்த 2005 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் முறையே 600, 300 பேர் பலியாகினர்.

1990களில் மட்டுமே சுமார் 40,000 பேர் நிலநடுக்கத்தினால் பலியாகினர், 3,00,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers