சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 25 பேர் பலியான சோகம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியில், வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதில் 17 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து பிரித்தானியவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறுகையில்,

‘சிரியாவின் டமாஸ்கஸ் நகரில், கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 17 குழந்தைகள் உட்பட, 25 பேர் பலியாகியுள்ளனர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அர்பீன், ஹர்சதா ஆகிய சிரியாவின் பிற நகரங்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 8 பேர் பலியாகினர்.

சிரியாவின் கிழக்குப் பகுதியில், ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலிலும் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகினர்.

மேலும், கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி உள்நாட்டு கலவரம் மூண்டது. அதில் இதுவரை 3,40,000 பேர் பலியாகியுள்ளனர்’ என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்