மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் காய்ச்சல்: பெண் ஒருவர் பலி

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்

நுண் கிருமிகளின் தாக்கத்தினால் அவ்வப்போது உலகளவில் புதிய நோய்கள் பரவுவது வழக்கமாக காணப்படுகின்றது.

ஆனாலும் சாதாரண சளிக் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் இறந்தமை தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனாவை சேர்ந்த Murrieta எனும் 20 வயதான இரண்டு குழந்தைகளின் தாயே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

இதில் குறித்த பெண்ணிற்கு காய்ச்சல் உண்டாகியிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த நாளிலே அவர் மரணமடைந்திருக்கின்றார்.

இதனால் குறித்த காய்ச்சலிற்கான வைரஸ் மிகக் கொடியதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

சாதாரணமாக சளிக்காய்ச்சலுக்கு A மற்றும் B வகை வைரஸ்களே காரணம் எனவும் இவற்றின் தாக்கம் 48 மணி நேரத்தினுள் உக்கிரமாக இருக்கும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்