ஏமன் நாட்டின் முன்னாள் அதிபர் கொலை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஏமன் நாட்டு முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் தலையில் காயம் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் அவர் இறந்துவிட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சாலேவின் பொது மக்கள் காங்கிரஸ் கட்சியும் அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்துள்ளது.

சாலேவின் ஆதரவாளர்கள் ஹூதி இயக்கத்துடன் இணைந்து ஏமனின் தற்போதைய அதிபர் அப்த்ரபுத் மன்சூர் ஹாதிக்கு எதிராக போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு சாலே ஆதரவாளர்களுக்கும், ஹூதி புரட்சி படையினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருதரப்பினரும் கடும் சண்டையில் ஈடுபட்டனர். அலி அப்துல்லா சாலே சுட்டுக்கொல்லபட்டார். அப்துல்லா சாலே கொல்லபட்டதால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் ஏமனில் உள்ள ஈரான் தூதரகத்தை தாக்கி தீ வைத்து எரித்தனர்.

இதனால் அங்கு பதற்றம் நிலவி வருவதையடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்