அடுத்த ஆண்டும் தேர்தலில் போட்டியிடுவேன்: விளாடிமிர் புதின்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புதின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 65 வயதாகும் விளாடிமிர் புதின், 2000ஆம் முதல் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 3 முறை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் புதின், அடுத்த ஆண்டும் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. அப்போது இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று புதின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிலுள்ள நிஸினி சோஃப்கோராடில் கார் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் மத்தியில் புதின் கூறுகையில்,

‘2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் புதின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 80 சதவீத மக்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்