ஏழை நாட்டில் ஆடம்பரமான பேய் விமான நிலையம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

மொசாம்பிக் நாட்டில் 200 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட சொகுசு விமான நிலையம் கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது.

ஆப்பிரிக்காவில் ஏழை நாடான மொசாம்பிக்கில் நாகாலா என்ற விமான நிலையம் 200 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டது.

ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகளை கையாளும் திறனுள்ள இந்த சொகுசு விமான நிலையம், பரபரப்பாக செயல்படும் விமான நிலையமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதனை திறந்து 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் 4 சதவீத பயணிகளை மட்டுமே இயங்குகிறது.

இங்கிருந்து புறப்படுவதற்கு விமானங்களே தற்போது இல்லை. பயணிகளும் இல்லை, பாதுகாவலர்களும் இல்லை. ஊழல் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு பிரேசிலை சேர்ந்த ஓடிப்ரெக்ட் நிறுவனத்தால் பொது வங்கி ஒன்றின் கடனுதவியில் கட்டப்பட்டது.

மொசாம்பிக்கும், பிரேசிலும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விமான நிலையம் பேய் நகரம் போன்று உள்ளது.

விமான நிலையம் இப்படி இருப்பதால், ஏழை நாட்டில் பிழைப்பதற்கு வழி இன்றி இருக்கும்போது இதுபோன்ற ஆடம்பர விமான நிலையம் தேவைதானா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers