டிரம்ப் முடிவால் பாலஸ்தீனம் - இஸ்ரேல் எல்லையில் கலவரம்: அமெரிக்கா மீது பொருளாதார தடை?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள டிரம்ப், தனது முடிவை பரீசிலனை செய்யவில்லை எனில் பொருளாதார தடைகளை கொண்டு வருவது குறித்து பரீசிலிக்கப்படும் என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பில் லெபானின் வெளியுறவு மந்திரி ஜெப்ரான் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் அங்கீகரிக்கப்படும் என்றும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதகரம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு பல நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் மற்று ஐரோப்பிய நாடுகள் டிரம்பின் இந்த முடிவு சர்வதேச சட்டத்திற்கு முரண்பாடானது என தெரிவித்து வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த அறிவிப்பால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் எல்லையில் கலவரமே உண்டாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஆலோசிப்பதற்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு நடைபெற்றது.

இதில் பேசிய லெபனான் வெளியுறவு மந்திரி ஜெப்ரான், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்கா முடிவு குறித்து நாம் தான் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும், அமெரிக்காவுக்கு எதிராக தூதரக ரீதியிலான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும், அரசியல் ரீதியான விவாதத்தை முன்னெடுத்து செல்வது, இதை அடுத்து நிதி மற்றும் பொருளாதார தடைகளை கொண்டு வருவது ஆகியவற்றை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...