இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம்: அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா அங்கீகாரம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அங்கீகரித்தை தொடர்ந்து உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன, பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து டெல் அவிவ் நகரில் உள்ள தூதரகத்தை ஜெருசலேத்துக்கு மாற்றவுள்ளதாகவும் அறிவித்தார்.

இதுதொடர்பாக ஐ.நா சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 193 நாடுகளில் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்தன.

இந்தநிலையில், அமெரிக்காவின் முடிவைப் பின்பற்றி இஸ்ரேலில் உள்ள தனது தூதரகத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நகருக்கு மாற்றப்போவதாக கவுதமாலா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளதாக கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மோரால்ஸ் அறிவித்துள்ளது.

இதனையடுத்து தூதரகத்தை மாற்றுவது தொடர்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கவுதமாலா அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்