ஷாப்பிங் மாலில் பயங்கர தீவிபத்து: 37 பேர் உயிரிழந்த சோகம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்சில் உள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் தவாவோ நகரில் நான்கு அடுக்கு ஷாப்பிங் மால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் ஜவுளிகள், மர சாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது.

தீப்பற்றிய சிறிது நேரத்தில் அது மளமளவென பரவியதால் மாலில் இருந்த ஏராளமானோர் தீயில் சிக்கினர்.

அவர்களில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் அதிகளவில் அனுப்பப்பட்டு பெரும் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன

ஏற்கனவே பிலிப்பைன்சின் மின்டானோ தீவில் கடும் சூறைக்காற்றுடன் பேய் மழை பெய்த நிலையில் 200 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் பல உயிர்களை தீவிபத்து காவு வாங்கியுள்ளது நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்