லொறியுடன் பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து: 36 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1883Shares
1883Shares
lankasrimarket.com

கென்யா நாட்டின் மத்திய பகுதியில் இன்று எதிர் திசையில் வந்த லொறி மீது பேருந்து மோதிய விபத்தில் 36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மோசமான சாலைகள் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், கென்யாவின் மேற்கு பகுதியில் இள்ள புசியா நகரில் இருந்து சென்ற பேருந்து ஒன்று இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் நாகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலை வழியாக வந்தபோது எதிர்திசையில் நாகுரு நகரில் இருந்து வேகமாக வந்த லொறி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்கள் உள்ளிட்ட 36 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 16 பேர் காயமடைந்தனர். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவ்விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் குறித்த நெடுஞ்சாலையில் 100-கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்