ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
64Shares
64Shares
ibctamil.com

ஈரானில் போராட்டம் தற்போது விஸ்வரூம் எடுத்து ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

ஈரான் நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இந்த போராட்டம் தற்போது 5-வது நாளை நெருங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தினால் பொலிசாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 9 பேர் பலியாகியிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அது இன்று 21-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து அந்த நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா கமேனி கூறுகையில், இந்த போராட்டங்களை எதிரிகள் தூண்டுவிடுவதாகவும், எதிரிகள் அனைவரும் ஒன்று கூடியிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும் பணம், ஆயுதங்கள், கொள்கைகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டி, ஈரான் அரசுக்கு எதிராக அவர்கள் மக்களை திசை திருப்பிவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டங்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலில் இருந்து சமூகவலைத்தளங்களில் மூலம் அழைப்புவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக இது வரை 450-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆரம்பத்தில் விலைவாசி உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்னைகளை மட்டும் குறிவைத்து சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் போராட்டம், நாளடைவில் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்