வருங்கால கணவனுடன் சிரித்து பேசியதால் மணப்பெண் சுட்டுக்கொலை

Report Print Harishan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் வருங்கால திருமணத்தம்பதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணாத்தில் உள்ள கோட்கி நடரத்தை சேர்ந்த நஸிரன் என்ற பெண்ணுக்கும் அவரது உறவினரான ஷாகித் என்ற இளைஞருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இளம்ஜோடியான இருவரும் திருமணத்திற்கு முன் தொலைபேசியில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இருவரும் ஒருநாள் பொதுவெளியில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்துள்ளனர்,

அப்போது அதனை கவனித்த நஸிரினின் மாமா, திருமணத்திற்கு முன் என்ன பேச்சு என கோபத்துடன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் இருவரையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே இருவரும் துடிதுடித்து இறந்த நிலையில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் மனித உரிமை ஆணையம்(HRCP), பாகிஸ்தானில் கடந்த பத்து வருடங்களாக ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 650 நபர்கள் கவுரவத்திற்காக கொல்லப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்