உலகிலேயே முதன்முறையாக சாதித்த நாடு: இப்படியும் ஒரு சட்டமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
345Shares
345Shares
ibctamil.com

ஐஸ்லாந்து நாட்டில் ஆண்களுக்கு நிகரான ஊதியத்தை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஊதியம் அளிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது.

தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தில் சுற்றுலா மற்றும் மீன்பிடி தொழில் மூலமாக வருமானம் ஈட்டப்படுகிறது.

மொத்தமாக 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் வசிக்கும், இந்நாட்டின் நாடாளுமன்றத்தில் 50 சதவித பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

எனினும் பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியமே அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆண்களுக்கு இணையான ஊதியத்தை, பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சட்டம் கடந்த செப்டம்பர் மாதம் இயற்றப்பட்டது, இந்த சட்டமானது புத்தாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் உலகிலேயே இப்படி ஒரு சட்டத்தை இயற்றிய முதல் நாடு எனும் பெருமையை ஐஸ்லாந்து பெற்றுள்ளது.

இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவுகள் வருவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம அளவிலான ஊதியத்தை வழங்க உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்