ஜப்பானை அடுத்து ஈரானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் உறைந்த மக்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கடந்த நவம்பர் மாதம் நிலநடுக்கம் ஏற்பட்டு 600 பேர் உயிரிழக்க காரணமான ஈரானின் அதே பகுதியில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து சக்தி வாய்ந்த நில அதிர்வுகளும் தொடர்வதால அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஈரானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Kermanshah மாகாணத்தில் இன்று இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

தலைநகர் டெஹ்ரானில் இருந்து சுமார் 520 கி.மீ தொலைவில் குறித்த பகுதி அமைந்துள்ளது. ரிக்டர் அளவில் 5.1 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் சுமார் 8 கி.மீ பரப்பளவில் தாக்கியுள்ளது.

இதில் 8-பேர் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் குறிப்பிடும்வகையில் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் குறித்த மாகாண ஆளுநர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதே பகுதியில் ரிக்டர் அளவில் 7.3 என கடந்த நவம்பர் மாதம் தாக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 600 பேர் கொல்லப்பட்டதுடன் 9,000 பேர் படுகாயமடைந்தனர்.

மட்டுமின்றி 50 விழுக்காடு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து இதுவரை சுமார் 400 நில அதிர்வுகள் இப்பகுதில் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு திரும்பவே அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு தாக்கிய ஒரு நிலநடுக்கத்தில் பாம் நகரம் மொத்தமாக சேதமடைந்ததுடன் 26,000 பேர் கொல்லப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers