துபாயில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்
148Shares
148Shares
ibctamil.com

துபாயில் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியதற்காக பிரித்தானியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Yaseen Killick(வயது 29), இவரது மனைவி Robyn-னுடன் துபாயில் வசித்து வருகிறார்.

சமீபத்தில் £ 6,000 மதிப்புள்ள VW Golf-வை தம்பதியினர் வாங்கியுள்ளனர், ஒரு மணிநேரத்தில் விபத்துக்குள்ளானதால் மிக கோபமாக கார் டீலருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதில், "இரவில் எப்படி உறங்குகிறீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் கிறிஸ்துமசுக்காக லண்டன் வருவதற்காக புறப்பட்டு சென்ற போது விமான நிலையத்தில் வைத்து Yaseen-னை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போது மூன்று வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் Yaseen, சிறைச்சாலை அனுபவம் பயங்கரமானதாக இருந்ததாகவும், வாட்ஸ் அப் செய்திக்காக இப்படியொரு நிலையா? என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்