குறட்டையால் உயிர் தப்பிய நபர்: ஸ்பெயினில் சுவாரசிய சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
184Shares
184Shares
ibctamil.com

இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் பிரேதப் பரிசோதனையின் போது குறட்டை விட்டதால் உயிர் தப்பிய சுவாரசிய சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஓவிடோ பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதப் பைக்குள் கொண்டுவரப்பட்ட உடலை, பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.

அங்கு அந்த உடலை கத்திகளால் கிழிப்பதற்கு ஆயத்தமாகியுள்ளனர். அப்போது திடீரென்று அந்த பிரேதம் குறட்டை விடத்தொடங்கியுள்ளது.

இதனால் அலறியடித்துக் கொண்டு ஓடிய ஊழியர் மருத்துவர்களை அழைத்து வந்து பார்த்தபோது, பிரேதத்தில் உயிர் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

குறட்டை விட்டதால் தப்பியவர் ஸ்பெயின் நாட்டு சிறையில் இருந்த கோன்சிலோ மோண்டாயா என்ற 29 வயது நபராவார். சிறையில் தவறுதலாக மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட அவர், குறட்டை விட்டதால் பிரேதப் பரிசோதனையில் இருந்து தப்பியிருக்கிறார்.

இருந்தபோதிலும், அவரது உடலில் ஸ்கால்பெல் கத்தியால் கீறத்தொடங்கியபோது, வலியால் துடித்த கோன்சிலோ மூச்சுத்திணறிய நிலையில்தான் காப்பாற்றப் பட்டிருக்கிறார் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்