இராணுவ டாங்கியை கடத்திச் சென்று சூப்பர்மார்க்கெட்டில் மோதிய நபர்: எதற்கு தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
155Shares
155Shares
ibctamil.com

ரஷ்யாவில் நபர் ஒருவர் ராணுவ டாங்கியை கடத்திச் சென்று சூப்பர்மார்க்கெட்டில் மோதவிட்டு மது போத்தலை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபர் உக்ரைனின் Crimea பகுதியில் தயாரிக்கப்பட்ட மது போத்தலை தேடிச் சென்று கைப்பற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரஷ்யாவின் Murmansk நகரிலேயே குறித்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடும் பனிப்பொழிவால் பாதிப்புக்கு உள்ளான மக்கள் மதுவை நாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நபர் ஒருவர் தமது மது தேவையை பூர்த்தி செய்ய, ராணுவ முகாமின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த டாங்கி ஒன்றை கடத்தியுள்ளார்.

அதை பிரதான சாலை வழியே செலுத்தி வந்த அவர், கட்டுப்பட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றையும் மோதி சேதப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அருகாமையில் உள்ள பல்பொருள் அங்காடியின் ஜன்னலில் மோதவிட்டு, பின்னர் உள்ளே புகுந்து தாம் விரும்பிய மது போத்தலை கைப்பற்றியுள்ளார்.

அவர் திருடிய அந்த மது போத்தலானது உக்ரைனின் Crimea பகுதியில் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்