ஈரானில் அடுத்தடுத்து நிகழ்ந்த 8 நிலநடுக்கங்கள்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
64Shares
64Shares
lankasrimarket.com

ஈரானின் மேற்கு கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து 8 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரான் ஊடகங்கள் கூறுகையில், ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்தில் இன்று அடுத்தத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

காலை 10.29 மணியளவில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியது. தென் பகுதியிலுள்ள கெர்மன் மாகாணத்தில் 5.1 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகியது. மற்ற இடங்களில் ரிக்டர் அளவு 5 ஆக பதிவாகியது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணி வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பாதிப்புகள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் சுமார் 620 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்