Youtube மூலம் 12.5 மில்லியன் டொலர் சம்பாதித்தவருக்கு நேர்ந்த கதி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
341Shares
341Shares
lankasrimarket.com

சர்ச்சைக்குரிய தற்கொலை வீடியோவை வெளியிட்ட Logan Paul என்பவருக்கு YouTube தண்டனை வழங்கியுள்ளது.

YouTubeஇல் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் இடுகைகள் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் அவர் 12.5 மில்லியன் டொலர்கள் சம்பாதித்ததாக Forbes பத்திரிகை கணக்கிட்டுள்ளது.

இதனால் அவர் 2017ஆம் ஆண்டின் YouTubeமூலம் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

தற்போது அவர் வெளியிட்ட தற்கொலை வீடியோ மற்றும் அதில் அவர் தெரிவித்த கருத்துக்களால் அவருக்கு மிகப் பெரிய வருமான இழப்பு ஏற்பட உள்ளது. அவருடன் செய்யப்பட்டிருந்த வியாபார ஒப்பந்தங்களை YouTube முறித்துக்கொண்டுள்ளது.

செவ்வாயன்று ட்விட்டரில் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்ட YouTube, உங்கள் அனைவரின் கருத்துக்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம், ஒருவரின் கருத்து மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதால் இனி இதுபோன்ற வீடியோக்களை இனி ஒருபோதும் வெளியிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

அதோடு நின்று விடாமல் YouTubeஇன் Google Preferred programmeஇலிருந்து Paulஇன் சேனல்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், Foursome என்னும் சீரியலிலும், The Thinning: New World Order என்னும் YouTube படத்திலும் அவர் நடிப்பதாக இருந்தது. இவை அனைத்திலும் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் Logan Paulக்கு பொருளாதார ரீதியாகவும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்