அதிர்ஷ்டசாலியை நிர்ணயிக்கும் போட்டி: பள்ளி மாணவனுக்கு கிடைத்த மரபீப்பாய் ஒயின்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
46Shares
46Shares
lankasrimarket.com

ஜப்பானில் நடைபெற்ற புத்தாண்டு தின ஓட்டத்தில் பள்ளி மாணவர் முதலாவதாக வந்துள்ளார்.

ஜப்பானில் NISHINOMIYA நகரில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் புத்தாண்டு தின ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மடாலயத்தின் பிரமாண்ட மரக்கதவு திறந்ததும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு கோவிலினுள் செல்ல முயன்றனர்.

இந்த ஓட்டப்பந்தயத்தில் பள்ளி மாணவரான Kurosu Sato முதலாவதாக வந்துள்ளார்.

அவருக்கு மரபீப்பாய் நிறைய பாரம்பரிய ஒயின் வழங்கப்பட்டது. முதல் மூன்று இடங்களில் வந்த வீரர்கள் இந்த ஆண்டின் அதிருஷ்டசாலியாக கருதப்படுகின்றனர்.

புத்தாண்டு தின காலையில் யார் முதலில் வழிபாடு நடத்த வருவது என்ற போட்டியே பந்தயமாக மாறியதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்