இலங்கையில் விசா பெற வேண்டுமா? புதிய நெறிமுறைகளை வெளியிட்ட அரசு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
725Shares
725Shares
ibctamil.com

இலங்கை அரசு விசா பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

இலங்கையில் விசா வழங்கும் தற்போதைய முறையை ஒழுங்குபடுத்தவும் புதுப்பிக்கவும் அமைச்சர்கள் அடங்கிய கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக Lanka Business online செய்தி வெளியிட்டுள்ளது.

கேபினட் குழுவின் சமீபத்திய அறிக்கையின்படி,விசா கட்டணத்தை இலங்கை ரூபாயில் வசூலிக்காமல், அமெரிக்க டொலர்களில் வசூலிக்கவும், விசா வழங்கும் முறையில் கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • BOI மண்டலங்களிலுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா வழங்குவதற்கானப் பரிந்துரை, அந்த BOI எந்தத் துறையின் கீழ் வருகிறதோ அந்தத் துறையின் செயலரால் வழங்கப்படவேண்டும்.
  • விசா காலாவதியான அன்னிய நாட்டவர்களுக்கு விசா கட்டணத்துடன் 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
  • அந்நிய நாட்டு மாணவர்களுக்கு அவர்களது கல்விக்காலம் முழுவதற்கும் Residential விசா வழங்கப்படும்.
  • 5,00,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் இலங்கைக்கு செலுத்தும் அன்னிய நாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான Residential விசா வழங்கப்படும்.
  • இலங்கைக் குடிமக்களை திருமணம் செய்யும் அந்நிய நாட்டவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கான Spouse விசா வழங்கப்படும்.
  • தொடர்ந்து 10 ஆண்டுகள் இலங்கையில் வசித்துவரும் கணவனை/மனைவியை இழந்த அல்லது 18 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளைகளை உடையவர்களுக்கு வேலைவாய்ப்புக் காரணங்களுக்காக 2 ஆண்டுகளுக்கான Residential விசா வழங்கப்படும்.
  • ஏற்கனவே இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ள, இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க இயலாத முன்னாள் இலங்கைக்காரர்களுக்கு நிரந்தர Residence விசா வழங்கப்படும்.

இந்தப் பரிந்துரை உள்துறை, Wayamba மேம்பாடு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் S.B. Navinna அவர்களால் முன்மொழியப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்