சிறுவயதில் வடகொரிய தலைவர் கிம் ஜாங்கின் குணம் என்ன? திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
586Shares
586Shares
lankasrimarket.com

வடகொரிய தலைவர் சர்வாதிகாரி கிம் ஜாங் சிறுவனாக இருக்கும் போதே மிகவும் கோபக்காரராக யாருக்கும் அடங்காதவராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

கிம் ஜாங் உன்-னின் தந்தை கிம் ஜாங் இல்-லுக்கு பாதுகாவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர் லீ-யங்-குக். அங்கு தனக்கு நடந்த சித்திரவதையால் லீ வடகொரியாவிலிருந்து தப்பித்து கனடாவுக்கு சென்றுவிட்டார்.

அவர் வடகொரியாவின் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் குறித்து அளித்துள்ள பேட்டியில், சிறுவனாக இருக்கும் போதே அவர் அடிக்கடி கோபப்படுவதுடன், ஒருவித மன அழுத்தத்துடன் தான் இருப்பார்.

முக்கியமாக பெண்களை அவர் மதிக்கவே மாட்டார், அவர்களிடம் அதிகம் கோபப்பட்டு கத்துவார்.

கிம் ஜாங் வயதிலான சிறுவர்கள் யாரும் அவரோடு அப்போது விளையாட மாட்டார்கள், பெரியவர்கள் தான் விளையாடுவார்கள்.

மற்றவர்கள் மனம் புண்படும் என நினைக்காத அவர் நினைத்த போதெல்லாம் தனது கோபத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவார் என கூறியுள்ளார்.

தனது பள்ளிப்படிப்பை கிம் ஜாங் சுவிட்சர்லாந்தில் படித்ததாகவும், படிப்பில் மந்தமாக இருந்தாலும் கூடைப்பந்து மற்றும் கணினி விளையாட்டில் அவர் ஆர்வமாக செயல்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்