சவுதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
196Shares
196Shares
ibctamil.com

சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுவதாக கூறி ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை சவுதி அரேபியா இடைமறித்து அழித்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபியாவின் Najran பகுதியில் உள்ள ஹெலிகொப்டர் மையத்தில் அமைந்துள்ள சிறப்பு படையினரின் முகாமை குறித்து தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இத்தாக்குதலுக்கு காஹெர் 2எம் ரக ஏவுகணை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி, Najran பகுதியில் ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்